இன்று ரேஷன் கடைக்கு முதல் முறையாக சர்க்கரை வாங்க சென்றேன்,...எடை போட எலக்ட்ரானிக் தராசு வைத்திருந்தார்கள்,பரவாயில்லை அரசாங்கம் எல்லா துறைகளிலும் நவீனமாகிவிட்டதே என்று சந்தோஷப்பட்டேன் மேட்டர் அது அல்ல.....சர்க்கரையை எடை போடும் போது தான் கவனித்தேன் அந்த எலக்ட்ரானிக் தராசில் எடையை காட்டும் display, எடை போடுபவரை நோக்கி இருந்தது. அவர் என்ன எடை போட்டால் தான் நமக்கு என்ன தெரியும்? இருந்தும் ஒரு வினாடி எதனையோ எடுக்க அவர் கீழே குனிந்தார், சட்டென்று எட்டிப் பார்த்தேன் எடை 5கிலோ வுக்கு 300கிராம் குறைவாக இருந்தது...இந்த கணத்தில் நான் எட்டிப்பார்த்ததை அவரும் பார்த்துவிட்டார்....
கேணத்தனமாய் சிரித்தார்!
"எடை சரியாக இருக்கிறதா என்று நாங்கள் பார்க்க வேண்டாமா? இந்த பக்கம் பார்த்து தராசை திருப்பி வைக்கலாமே? என்று கேட்டேன்"
'இல்லை சார் இப்படித்தான் வைக்க சொல்லியிருக்கிறார்கள்' என்றார்.
நான் யார் என்று கேட்கவில்லை....
அந்த தராசுக்கு பெயர் தான் அரசாங்க இயந்திரமோ?
No comments:
Post a Comment